Published:Updated:

எதிர்க்கட்சிகள் அமளி: முதல் நாளே முடங்கியது நாடாளுமன்றம்!

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

12 நாட்கள் நடைபெறும் 15வது நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் முதலில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தெலங்கானா உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

##~~##
இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு அவை கூடியபோதும், அதே பிரச்னை காரணமாக அவையில் அமளி நீடித்தது. இதன் காரணமாக மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அதேப்போன்று மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்த கட்டுரைக்கு