Published:Updated:

இலங்கை அதிகாரிகளால் உயிருக்கு அச்சறுத்தல்: அனந்தி சசிதரன்

விகடன் விமர்சனக்குழு
இலங்கை அதிகாரிகளால் உயிருக்கு அச்சறுத்தல்: அனந்தி சசிதரன்
இலங்கை அதிகாரிகளால் உயிருக்கு அச்சறுத்தல்: அனந்தி சசிதரன்

யாழ்ப்பாணம்: தமது உயிருக்கோ, பாதுகாப்புக்கோ உத்தரவாதம் இல்லை என்பதால் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று இலங்கை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
 

இலங்கை அதிகாரிகளால் உயிருக்கு அச்சறுத்தல்: அனந்தி சசிதரன்

கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

##~~##
இலங்கை அரசின் பொறுப்புமிக்க அதிகாரி ஒருவர், தன்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ள அனந்தி சசிதரன், தமது உயிருக்கோ பாதுகாப்புக்கோ உத்தரவாதம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தாம் எவ்வாறு அமைதியான மனோநிலையில் ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்பது சாத்தியமாகும் என்றும் அனந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.