Published:Updated:

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: நாராயணசாமி

Vikatan Correspondent
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: நாராயணசாமி
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: நாராயணசாமி
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: நாராயணசாமி

சென்னை: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தி்ல் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.நா. தீர்மான பிரச்னையை தமிழக கட்சிகள் அரசியலாக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்துபவர்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்றார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.