Published:Updated:

ஈழத்தமிழர் படுகொலை: பிப்.26ல் ஐ.நா.வுக்கு அழுத்தம்: கி.வீரமணி

Vikatan Correspondent
ஈழத்தமிழர் படுகொலை: பிப்.26ல் ஐ.நா.வுக்கு அழுத்தம்: கி.வீரமணி
ஈழத்தமிழர் படுகொலை: பிப்.26ல் ஐ.நா.வுக்கு அழுத்தம்: கி.வீரமணி
ஈழத்தமிழர் படுகொலை: பிப்.26ல் ஐ.நா.வுக்கு அழுத்தம்: கி.வீரமணி

சென்னை: ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி விசாரணை கோரி ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாளான பிப்ரவரி 26ல் ஐ.நா.வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''2012ஆம் ஆண்டில் பிரிட்டானிய நாடாளுமன்றத்தில், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய உலகின் பன்னாடுகள் சார்ந்த அமைப்புகளாலும், தொண்டு நிறுவனங்களாலும் ஒரு முக்கிய கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றி சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்றை ஐ.நா.வின் உறுப்பினராக உள்ள நாடுகள் வற்புறுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பிப்ரவரி 26ஆம் நாளை 'ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள்' என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனுசரிக்கின்றனர். இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ள பரிந்துரைகளை சுட்டிக் காட்டுவதும், அந்த அடிப்படையில் ஐ.நா. செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தவும் உலக நாடுகளும் ஐ.நா.வுக்கு அழுத்தும் கொடுக்க வேண்டும் என்று கோரவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களிடம் வெறுப்பு விரோத மனப்பான்மை மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரத்தில் கண் துடைப்பான விசாரணையை போலல்லாமல் சரியான முறையில் விசாரணை நடத்தவேண்டும். மனித உரிமை மீறல் பற்றிய விவகாரத்தில் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இலங்கை அரசு விசாரணை நடத்தவேண்டும். மேலும் இதுவரை நடந்த சில மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு பற்றிய விசாரணையை மறு ஆய்வு செய்து அதையும் சர்வதேச சட்ட திட்டத்திற்கு ஏற்ப மறு விசாரணை செய்யவேண்டும்.

 மனித உரிமை அமைப்புகளும், உலக நாடுகளும், ஐ.நா.வும், குறிப்பாக இந்தியாவும் இந்த மனித உரிமை காக்கும் பணியில் தத்தம் கடமைகளை ஆற்றிட முன்வர வேண்டும் என்று  உலகத் தமிழர்கள் அறிவித்துள்ள இந்த ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாளில் (பிப்ரவரி 26) வலியுறுத்துகிறோம்'' எனக் கூறியுள்ளார்.