Published:Updated:

7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் போராட்டம்!

Vikatan Correspondent
7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் போராட்டம்!
7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் போராட்டம்!

சென்னை: ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மத்திய அரசின் வருமானவரி அலுவலகத்தினை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் போராட்டம்!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தொடர்ச்சியாக சிறையில் வாடும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர்களின் விடுதலையை தடுக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன் அருகே உள்ள வருமானவரி அலுவலகத்தினை இன்று (25ஆம் தேதி) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் போராட்டம்!

இந்த போராட்டத்தின்போது, காங்கிரஸ் கொடியையும் மாணவர் அமைப்பினர் எரித்தார்கள். இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தினை தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பின்னும் இவர்களின் விடுதலையை காங்கிரஸ் கட்சி ஏன் தடுக்கிறது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்?

7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் போராட்டம்!

மாணவர்கள் சார்பில் ஜோ.பிரிட்டோ கருத்து தெரிவிக்கையில், ''ஏழு தமிழர்களின் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் அரசை கடுமையாக கண்டித்தே மத்திய அரசின் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டோம். இவர்களின் விடுதலைக்கு பக்க பலமாக நிற்கும் தமிழக முதல்வருக்கு என்றுமே துணை நிற்போம். தொடர்ந்து துணிச்சலான முடிவுகளை எடுக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.

மத்திய அரசின் அலுவலகமான வருமானவரி அலுவலகத்தினை முற்றுகையிட்ட மாணவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைதான அனைத்து மாணவர்களும் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சமுதாயநல கூடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

செய்தி, படங்கள்: செ.கிரிசாந்