Published:Updated:

பா.ஜனதா கூட்டணியில் இணைந்தது லோக் ஜனசக்தி!

Vikatan Correspondent
பா.ஜனதா கூட்டணியில் இணைந்தது லோக் ஜனசக்தி!
பா.ஜனதா கூட்டணியில் இணைந்தது லோக் ஜனசக்தி!
பா.ஜனதா கூட்டணியில் இணைந்தது லோக் ஜனசக்தி!

புதுடெல்லி: பா.ஜனதா கூட்டணியில் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி இணைந்துள்ளது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, லோக் ஜனசக்தி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து, கூட்டணியிலிருந்து விலகிய அக்கட்சி, 2004 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றது.

இந்நிலையில், பா.ஜனதா கூட்டணியில் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி இணைந்துள்ளது. டெல்லியில் இது குறித்து ராம் விலாஸ் பாஸ்வானும், பா.ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், ''தேசிய ஜனநாயக கூட்டணி விரிவடையத் தொடங்கியுள்ளது" என்றார்.

மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ளது பற்றி ராம் விலாஸ் பஸ்வான் கூறும்போது, ''வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும்" என்றார்.