Published:Updated:

மகாராஷ்டிர பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 6 பேர் பலி!

Vikatan Correspondent
மகாராஷ்டிர பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 6 பேர் பலி!
மகாராஷ்டிர பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 6 பேர் பலி!
மகாராஷ்டிர பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 6 பேர் பலி!

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணி்க்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அந்த தொழிற்சாலையில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.