Published:Updated:

தமிழகத்தில் 15 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு!

Vikatan Correspondent
தமிழகத்தில் 15 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு!
தமிழகத்தில் 15 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு!
தமிழகத்தில் 15 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு!

கோவை: தமிழகத்தில் 15 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஷாசியா இல்மி கோவையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் 15 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதற்கான வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக ஆம் ஆத்மி வேட்பாளரை நிறுத்தும்.  தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு எதிராக ஆம் ஆத்மி பிரசாரம் செய்யும்" என்று அவர் தெரிவித்தார்.