Published:Updated:

நாட்டின் முதல் எலெக்ட்ரிக் பேருந்து பெங்களூரில் அறிமுகம்!

Vikatan Correspondent
நாட்டின் முதல் எலெக்ட்ரிக் பேருந்து  பெங்களூரில் அறிமுகம்!
நாட்டின் முதல் எலெக்ட்ரிக் பேருந்து பெங்களூரில் அறிமுகம்!
நாட்டின் முதல் எலெக்ட்ரிக் பேருந்து  பெங்களூரில் அறிமுகம்!

பெங்களூரு: இந்திய நாட்டின் முதல் எலெக்ட்ரிக் பேருந்து பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக எலெக்ட்ரிக் பேருந்தை பெங்களூரு மாநகர பேருந்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேருந்தின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணிநேரம் ஆகும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கி.மீ வரை ஓடும்.

தற்போதைய நிலையில் இந்த பேருந்தை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயிண்ட் பெங்களூருவின் மெஜஸ்டிக் பகுதியில் மட்டுமே உள்ளது. இந்த பேருந்தின் மதிப்பு ரூ.2.7 கோடியாகும்.

இந்த பேருந்து தற்போது பெங்களூருவின் மெஜஸ்டிக் பகுதியிலிருந்து கடுகோடி வரையில் சோதனை முறையில் இயக்கப்படுகிறது. இதன் பயணக்கட்டணமாக ரூ.80 வசூலிக்கப்படுகிறது. விரைவில் இந்த பேருந்து விமான நிலைய வழித்தடங்களிலும் இயக்கப்பட உள்ளது.

அமெரிக்கா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற எலெக்ட்ரிக் பேருந்துகள் சுமார் 5 ஆயிரம் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.