Published:Updated:

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Vikatan Correspondent
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி்க்கு சிதம்பரம், திருவள்ளூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, சிதம்பரம் தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும், திருவள்ளூர் தொகுதிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.