Published:Updated:

ஆம் ஆத்மியில் இணைந்தார் தேசிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் வசீகரன்!

Vikatan Correspondent
ஆம் ஆத்மியில் இணைந்தார் தேசிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் வசீகரன்!
ஆம் ஆத்மியில் இணைந்தார் தேசிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் வசீகரன்!

சென்னை: ஆம் ஆத்மி கட்சியில் தேசிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் வசீகரன் இன்று இணைந்தார்.

ஆம் ஆத்மியில் இணைந்தார் தேசிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் வசீகரன்!

ஆம் ஆத்மி கட்சி, ஊழலற்ற, பொது வாழ்வில் தூய்மையும், உண்மையும் உடைய அரசியலை இந்தியா முழுவதும் உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது. அண்மை காலங்களில் தமிழகத்திலும் நிறைய சமூக ஆர்வலர்களும், சமூக போராளிகளும் ஆம் ஆத்மி கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர்.

ஆம் ஆத்மியில் இணைந்தார் தேசிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் வசீகரன்!

இதுவரை தமிழகத்தில் 3 லட்சம் பேர் தங்களை ஆம் ஆத்மியின் உறுப்பினராக பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் அணு உலைக்கு எதிரான இயக்க தலைவர்ர் உதயகுமார் மற்றும் ஜேசு ராஜ் உட்பட பலர், ஆம் ஆத்மியின் மாநில பிரசாரக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் முன்னிலையில் இணைந்தனர்.

இந்நிலையில், இன்று சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது, தேசிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் வசீகரன் தன்னை ஆம் ஆத்மி கட்சியில் இணைத்துக் கொண்டார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''ஒரு சமூக மாற்றத்திற்கும் சிறந்த சமூக உருவாக்கத்திற்காக பாடுபடும் நாங்கள் அதனை விரைந்து எடுத்துச் செல்லும் சக்தியாக ஆம் ஆத்மியை பார்க்கிறோம். எனவே, அதனோடு எங்களையும் இணைத்துக் கொண்டு அந்த சக்தியை வலுப்படுத்தி சமூக மாற்றத்திற்கு துணை நிற்போம்" என்று கூறினார்.

இதனை வரவேற்று டேவிட் பருண்குமார் பேசும்போது, ''ஒவ்வொரு நாளும் இதுபோன்ற செயல்திறன் உள்ளவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருவது எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. இந்த நிகழ்வு வரும் காலங்களில் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும். விரைவில் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

படங்கள்: நாகமணி