Published:Updated:

சத்தீஸ்கர் அரசுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை: ஷிண்டே

Vikatan Correspondent
சத்தீஸ்கர் அரசுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை: ஷிண்டே
சத்தீஸ்கர் அரசுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை: ஷிண்டே
சத்தீஸ்கர் அரசுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை: ஷிண்டே

ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து சத்தீஸ்கர் அரசுக்கு முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை தரப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு இன்று சென்ற உள்துறை அமைச்சர், அம்மாநில முதலமைச்சர் ரமண்சிங்குடன் ஜெக்தல்பூர் சென்றார். நேற்று நடத்தப்பட்ட நக்சல் தாக்குதலில் உயிரிழந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அவர்கள் இருவரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று புலனாய்வுத்துறை ஏற்கனவே 3 முறை எச்சரிக்கை விடுத்ததாக கூறினார்.

ஆனால், தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ள இடம் குறித்து புலனாய்வுத் தகவல் இல்லை என்றும், புலனாய்வுத் தகவல்களை சத்தீஸ்கர் அரசு அலட்சியப்படுத்தியதால்தான், மாவோயிஸ்ட் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும் ஷிண்டே தெரிவித்தார்.

சி.ஆர்.பி.எப். வீரர்கள் 16 பேர் பலியாகக் காரணமான இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும் என்றும் ஷிண்டே கூறினார்.