Published:Updated:

கெஜ்ரிவாலின் புறநகர் ரயில் பயணத்தால் மும்பை ரயில் நிலையங்களில் களேபரம்!

Vikatan Correspondent
கெஜ்ரிவாலின் புறநகர் ரயில் பயணத்தால் மும்பை ரயில் நிலையங்களில் களேபரம்!
கெஜ்ரிவாலின் புறநகர் ரயில் பயணத்தால் மும்பை ரயில் நிலையங்களில் களேபரம்!
கெஜ்ரிவாலின் புறநகர் ரயில் பயணத்தால் மும்பை ரயில் நிலையங்களில் களேபரம்!

மும்பை: இன்று மும்பை வந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்டோ ரிக்‌ஷாவிலும், புறநகர் ரயிலிலும் மேற்கொண்ட பயணம் களேபரத்தை ஏற்படுத்தியது.

கட்சி நிதி திரட்டுவதற்காகவும், சாலை வழி பிரசாரம் ( Road show) செய்வதற்காகவும் இன்று காலை மும்பை விமான நிலையம் வந்திறங்கிய கெஜ்ரிவால், அங்கிருந்து ஆட்டோ ரிக்‌ஷா ஒன்றை அமர்த்தி அதில் அந்தேரி ரயில் நிலையத்திற்கு வந்தார்.

ஆட்டோவில் அமர்ந்தபடியே வந்த அவருக்கு, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர் வேண்டாம் என மறுத்தபோதிலும் போலீஸார் பாதுகாப்புக்கு உடன்வந்தனர். கூடவே அவரது ஆதரவாளர்கள் பின்னால் ஓடிவந்தனர்.

அந்தேரி ரயில் நிலையத்திற்கு வந்த கெஜ்ரிவாலை பார்த்த பயணிகள் கூட்டம் திரண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு, மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் நெரில் ஏற்பட்டது. இந்நிலையில் கெஜ்ரிவால் அந்தேரி ரயில் நிலையத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு புறநகர் ரயிலில் சர்ச்கேட் ரயில் நிலையத்திற்கு சென்றார்.

அவர் சென்ற ரயில் பெட்டியில் கெஜ்ரிவால் மற்றும் அவரது ஆதரவாளர்களை தவிர வேறு யாரும்

கெஜ்ரிவாலின் புறநகர் ரயில் பயணத்தால் மும்பை ரயில் நிலையங்களில் களேபரம்!

அனுமதிக்கப்படவில்லை. அந்தேரிக்கும் சர்ச்கேட் ரயில் நிலையத்திற்கும் இடையே 14 ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், கெஜ்ரிவால் பயணம் செய்த பெட்டியில் போலீஸார் பாதுகாப்புக்கு நின்றனர்.

இந்நிலையில் என்டிங் பாயின்டான சர்ச்கேட் ரயில் நிலையத்திற்கு வந்தார் கெஜ்ரிவால். அங்கும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

அப்போது அவரது ஆதரவாளர்கள் சர்ச்கேட் ரயில்நிலையத்தில் ஏகத்திற்கும் களேபரத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த மெட்டல் டிடெக்டர் கருவி உடைக்கப்பட்டது.

இதனிடையே கெஜ்ரிவால், சர்ச்கேட் ரயில் நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு சென்றார்.

கெஜ்ரிவாலின் இந்த ரயில் பயணம் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா பயணத்தால் ஏற்பட்ட நெரிசல் பொதுமக்களுக்கு மட்டுமல்லாது, போலீசாருக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.