Published:Updated:

உருவ பொம்மை எரிப்பு எதிரொலி: டி.ஆர்.பாலு- பழனிமாணிக்கம் திடீர் சந்திப்பு!

Vikatan Correspondent

புதுக்கோட்டை: தஞ்சாவூர் தொகுதி தி.மு.க வேட்பாளரான டி.ஆர்.பாலு மாவட்ட செயலாளரான பழனிமாணிக்கத்தை சந்தித்திருக்கிறார்.

தஞ்சாவூர் தொகுதிக்கான மோதல் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கியது. அன்று தொடங்கிய யுத்தம், தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கும் வரை தொடர்ந்திருக்கிறது.

தி.மு.க தலைமையிடம் தலையால் தண்ணி குடித்தும் பழனிமாணிக்கத்திற்கு சீட் கொடுக்கப்படவில்லை. இந்த தகவலால் பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள் கொதித்துப்போய் டி.ஆர்.பாலுவின் உருவ பொம்மையை கொளுத்தி தங்களுடைய எதிர்ப்பை காட்டினர். இதற்கு பதிலடி தரும் விதமாக செங்கிப்பட்டியில் உருவ பொம்மையை கொளுத்தியவர்களை உருட்டுக்கட்டையுடன் விரட்டினார்கள் டி.ஆர்.பாலுவின் ஆதரவாளர்கள்.

இந்நிலையில், "நீங்கள் இப்படியெல்லாம் செய்தால் எனக்குத்தான் பாதிப்பு!" என பழனிமாணிக்கம் அவரது ஆதரவாளர்களை சமாதானப்படுத்தினார்.

இது இப்படியிருக்க இன்று பழனிமாணிக்கத்தை சந்தித்த டி.ஆர்.பாலு, சால்வை அணிவித்துவிட்டு போயிருக்கிறார். நேற்றே பழனிமாணிக்கத்தை தொடர்பு கொண்ட டி.ஆர்.பாலு இன்று நேரில் வருகிறேன் என சொல்லியிருக்கிறார். இதற்காக தி.மு.க.வின் மாவட்ட தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் காத்திருந்த பழனிமாணிக்கத்தை டி.ஆர்.பாலு சந்தித்திருக்கிறார். சுமார் பத்து நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக சொல்கிறார்கள் தி.மு.க புள்ளிகள்.

வீ.மாணிக்கவாசகம்