Published:Updated:

ஆ.ராசா, தயாநிதி மாறனுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துகிறது ஆம் ஆத்மி !

Vikatan Correspondent
ஆ.ராசா, தயாநிதி மாறனுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துகிறது ஆம் ஆத்மி !
ஆ.ராசா, தயாநிதி மாறனுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துகிறது ஆம் ஆத்மி !
ஆ.ராசா, தயாநிதி மாறனுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துகிறது ஆம் ஆத்மி !

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக  ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக வேடட்பாளர்கள் பட்டியலில், 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் ஆ. ராசா நீலகிரி தொகுதியிலும், தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் இந்த இரண்டு பேரையும் எதிர்த்து தங்கள் கட்சி வேட்பாளரை

ஆ.ராசா, தயாநிதி மாறனுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துகிறது ஆம் ஆத்மி !

நிறுத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக நிறுவனத் தலைவரான டேவிட் பருன்குமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ள கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராளியான உதயகுமாரனுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில்,  அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்று கேட்டபோது, " உதயகுமாரன் கைது செய்யப்பட்டாலும், அவர் சிறையில் இருந்தபடியே வேட்பு மனுவை தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிடுவார்" என பதிலளித்தார்.

மேலும் அதிமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்குமா? எனக் கேட்டபோது, "அவர்கள் கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு ஏற்ப நடப்பதில்லை" என பதிலளித்தார் பருன்குமார்.