Published:Updated:

பாதுகாப்பு கருதி ரயிலில் ஏசி பெட்டிகளில் திரைகள் நீக்கம்!

புதுடெல்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக ரயிலில் ஏசி பெட்டிகளில் திரைகளை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.

ரயில்களில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் பயணிக்கிற பயணிகளின் அந்தரங்கத்தை கருத்தில் கொண்டு இருக்கைகளின் ஓரத்தில் மறைவுக்காக (நடைபாதையில்) திரைகள் பொருத்தப்படுவது, கடந்த 2009ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி ஆந்திர மாநிலம், அனந்தப்பூரில், பெங்களூர்-நாந்தெட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஏ.சி. மூன்றடுக்கு பெட்டியில் தீப்பிடித்தது. இதில் அந்த பெட்டியில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து ரயிலில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் ஜன்னல் திரைகளைத் தவிர்த்து பிற திரைகளை அகற்றி விடலாம் என ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது. இதுபற்றி ரயில்வே வாரியம், கடந்த 12ஆம் தேதி கூடி விவாதித்தது. அதன் முடிவில், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பரிந்துரையை அடுத்து மூன்றடுக்கு பெட்டிகளில் திரைச்சீலைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரயில்வே வாரியத்தின் முடிவு, அனைத்து மண்டல ரயில்வேகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் பராமரிப்புக்காக பணிமனைகளுக்கு செல்கிறபோது, இந்த திரைகளை அகற்றி விடுவார்கள்" என்றார்.