Published:Updated:

மும்பை விமான நிலையத்தில் 6 உள்ளாடைகள் அணிந்து தங்கம் கடத்திவந்த பெண்!

Vikatan Correspondent
மும்பை விமான நிலையத்தில் 6 உள்ளாடைகள் அணிந்து தங்கம் கடத்திவந்த பெண்!
மும்பை விமான நிலையத்தில் 6 உள்ளாடைகள் அணிந்து தங்கம் கடத்திவந்த பெண்!
மும்பை விமான நிலையத்தில் 6 உள்ளாடைகள் அணிந்து தங்கம் கடத்திவந்த பெண்!

மும்பை: 6 உள்ளாடைகள் அணிந்து தங்கம் கடத்திவந்த பெண் மும்பை விமான நிலையத்தில் சோதனையில் சிக்கினார்.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நைரோபியிலிருந்து வந்த விமானத்தில் இறங்கிய கென்யா நாட்டு பெண் ஒருவரது நடவடிக்கைகள் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து பெண் காவலர்களை வைத்து அவரிடம் சோதனை நடத்தப்பட்டது.அப்போது அவர் 2.14 கிலோ தங்கத்தை தனது தொடைகளுக்கு இடையே பதுக்கி வைத்திருப்பதும், அது கீழே தொங்கி காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக  6 உள்ளாடைகளை ஒன்றின் ஒன்றின் மீதாக அணிந்திருந்ததும் தெரியவந்தது.

அவர் கடத்திவந்த தங்கத்தின் மதிப்பு 54.2 லட்சம் ரூபாயாகும். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துகொண்டு, ஒரு லட்சம் ரூபாய் பிணையில் விடுத்தனர்.