Published:Updated:

கருத்து கணிப்புகள் எப்போதுமே சரியாக இருப்பதில்லை: ஞானதேசிகன்

Vikatan Correspondent
கருத்து கணிப்புகள் எப்போதுமே சரியாக இருப்பதில்லை: ஞானதேசிகன்
கருத்து கணிப்புகள் எப்போதுமே சரியாக இருப்பதில்லை: ஞானதேசிகன்
கருத்து கணிப்புகள் எப்போதுமே சரியாக இருப்பதில்லை: ஞானதேசிகன்

சென்னை: கருத்து கணிப்புகள் எப்போதுமே சரியாக இருப்பதில்லை என்று ஞானதேசிகன் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசின் இன்று நிருபர்களை சந்தித்தார்.

அப்போது, ''தமிழ்நாட்டில் காங்கிரசுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி நடப்பதால் அவர்கள் எங்களை விமர்சிக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களைத்தான் பிடிக்கும் என்று கூறுவது தவறு. கருத்து கணிப்புகள் எப்போதுமே சரியாக இருப்பதில்லை.

தமிழ் நாட்டில் போட்டியிடும் எல்லா கட்சிகளும் 40 தொகுதிகளையும் பிடிப்போம் என்று சொல்லி வரும்போது நாங்களும் அப்படி சொல்வதில் என்ன தவறு. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் வருகின்ற 10 ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரசாரம் செய்ய வருகிறார்கள்" என்றார்.