Published:Updated:

தஞ்சை டெல்டா பகுதியை பாலைவனமாக்க திட்டமிட்டவர் டி.ஆர்.பாலு: ஜெயலலிதா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் டெல்டா பகுதியை பாலைவனமாக்க திட்டமிட்டவர் டி.ஆர்.பாலு  என்று தஞ்சாவூர் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து இன்று பிரசாரம் செய்த ஜெயலலிதா, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க டி.ஆர்.பாலு நடவடிக்கை எடுத்தாரா? என்றும், காவிரி நதிநீரில் நமக்குரிய பங்கை பெற்றுத்தர கருணாநிதி நடவடிக்கை எடுத்தாரா? என்றும்  கேள்வி எழுப்பினார்.

கர்நாடகா தண்ணீர் தர மறுத்ததால் டெல்டாவில் விவசாயம் பாதிக்கப்பட்டது என்று ஜெயலலிதா கூறினார்.

சேது கால்வாயில் அதிக கப்பல்கள் வந்து செல்லும் என்பது பொய் என்று கூறிய அவர், நிலக்கரி எடுத்து வரும் கப்பல் கூட சேது சமுத்திர கால்வாயை பயன்படுத்த முடியாது என்றும், தமிழக அரசின் தடையில்லா சான்றிதழ் கூட பெறாமல் சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

2014 மக்களவை தேர்தல், நாட்டு மக்களுக்கு விடுதலையை பெற்றுத் தரும் தேர்தல் என்றும், மாற்றத்திற்கான தேர்தல் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ், திமுக பெரும் ஊழலில் ஈடுபட்டன என்று தெரிவித்த ஜெயலலிதா, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், தமிழக அரசின் சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு