Published:Updated:

தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது!

Vikatan Correspondent
தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது!
தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது!
தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 24 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29 ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.

இறுதி நாளன்று தி.மு.க. சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மெய்யப்பனும் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

இதேபோல், கடலூர் தி.மு.க. நாடாளுமன்ற வேட்பாளர் நந்த கோபாலகிருஷ்ணன் ஆட்சியர் கிர்லோஷ் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையும் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தாக்கலாகியுள்ள மனுக்கள் நாளை (7.4.14) பரிசீலனை செய்யப்படுகிறது. வருகின்ற புதன்கிழமை (09.04.14) அன்று வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும்.