Published:Updated:

தெலுங்கு தேசம் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தெலுங்கு தேசம் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தெலுங்கு தேசம் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தெலுங்கு தேசம் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தெலுங்கு தேசம் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஐதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று வெளியிட்டார்.

ஆந்திராவில் வருகின்ற 30 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைகிறது. பா.ஜ.க.வுடனான தேர்தல் கூட்டணியை தெலுங்குதேசம் கட்சி இறுதி செய்துள்ளது.

கூட்டணி ஒப்பந்தப்படி தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 72 தொகுதிகளிலும், மீதமுள்ள 47 தொகுதிகளில் பா.ஜனதாவும் போட்டியிடுகின்றன. 17 மக்களவைத் தொகுதிகளில் 9ல் தெலுங்கு தேசமும், 8 தொகுதிகளில் பா.ஜனதாவும் போட்டியிடுகின்றன.

 இதையடுத்து, இன்று தெலுங்குதேசம் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். அதில், 27 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது எம்.பி.யாக இருக்கும் ரமேஷ் ரத்தோட் அடிலாபாத் தொகுதியிலும், மதன் மோகன் ராவ், பனோத் மோகன் லால் ஆகியோர் முறையே ஜாகிராபாத் மற்றும் மெகபூபாபாத் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், நடப்பு எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கு அவர்களின் தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு