Published:Updated:

செய்திச் சுருக்கம்: ஜூலை 09,2011

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக, விவசாயிகளிடம் இருந்து  நிலங்களைக் கையகப்படுத்தப்படும் நடவடிக்கை தொடர்பாக புதிய மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ##~~##

*
மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறன் விலகிய நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தற்போதைய அரசியல் சூழல் குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆலோசித்ததாக தெரிவித்தார்.

காங்கிரஸ் - திமுக உறவில் விரிசல் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை மறுத்த அவர், இந்த உறவு நீடிப்பதாகவும், கூட்டணி மேலும் வலுவடையும் என்றும் அவர் கூறினார்.


*
மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் துவக்கத்தில் மாற்றியமைக்கப்படவுள்ளதாக கூறப்படும் சூழலில், டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

*
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றாத பட்சத்தில் ஆகஸ்ட் 16-ல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவது உறுதி என காந்தியவாதி அண்ணா ஹஸாரே மீண்டும் எச்சரித்தார்.

மேலும், மத்திய அமைச்சரவையில் நேர்மையானவர்களை சேர்ப்பது பிரதமர் மன்மோகன் சிங்கின் பொறுப்பு என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

*
சட்டவிரோதமாக தனது குடும்பம் 1,500 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்திருப்பதாக ஆளும் பிஜேபி அரசு கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி சனிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

*
சூடானில் இருந்து பிரிந்து, தெற்கு சூடான் - உலகின் புதிய நாடாக சனிக்கிழமை உதயமானது. அந்நாட்டு மக்கள் நள்ளிரவு தொடங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

*
உலகின் 193-வது நாடாகாவும், ஆப்பிரிக்க கண்டத்தின் 54-வது நாடாகவும் மலர்ந்துள்ள தெற்கு சூடானுக்கு இந்திய மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், வடக்கு சூடானுடனான அனைத்து பிரச்னைகளையும் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வதாக தெற்கு சூடான் கூறியிருப்பது பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.

*
பாகிஸ்தானில் கராச்சி நகரில் ஐந்தாவது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்த உள்நாட்டு கலவரத்தில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.

*
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ல் ஏழைகளுக்கு ஆடு, மாடுகள் இலவசமாக வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக, 1600 குடும்பங்களுக்கு தலா ஒரு கறவை மாடும், அதே எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகளும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

*
ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாமாயில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் தெரிவித்துள்ளார்.

*
சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

*
சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,096 ரூபாயாக இருந்தது.