Published:Updated:

கர்நாடகாவில் ஏ.சி. பஸ் தீப்பிடித்து 6 பயணிகள் பரிதாப பலி!

கர்நாடகாவில் ஏ.சி. பஸ் தீப்பிடித்து 6 பயணிகள் பரிதாப பலி!
கர்நாடகாவில் ஏ.சி. பஸ் தீப்பிடித்து 6 பயணிகள் பரிதாப பலி!
கர்நாடகாவில் ஏ.சி. பஸ் தீப்பிடித்து 6 பயணிகள் பரிதாப பலி!

பெங்களூர்: கர்நாடகாவில் ஏ.சி. பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 6 பயணிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் தவன்கெரேவில் இருந்து பெங்களூருக்கு நேற்றிரவு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. அந்த தனியார் குளிர்சாதன சொகுசு பஸ்சில் மொத்தம் 29 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை அந்த பஸ் சித்ரதுர்கா அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டீசல் டேங்கில் கசிவு ஏற்பட்டு திடீரென வெடித்து பஸ் முழுவதும் தீ பற்றிக் கொண்டது.

அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் தீ பிடித்தபோது, பயணிகளில் பெரும்பாலானவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். தீ பரவியதை தொடர்ந்து பயணிகள் அலறியபடி பஸ்சில் இருந்து உயிர் பிழைக்க கதவை திறந்து கொண்டு வெளியேறினார்கள். இதில், 11 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக வெளியில் தப்பி வந்துவிட்டனர். 18 பயணிகள் மட்டும் பஸ் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களில் 6 பேர் பஸ் உள்ளே சிக்கி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையே சொகுசு பஸ்சில் தீ பிடித்த தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த 12 பயணிகளையும் மீட்டு சிகிச்சைக்காக தவன்கெரேயில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பஸ்சின் டிரைவர், கிளீனர் இருவரும் உயிர் தப்பியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.