Published:Updated:

மெட்ரோ ரயில் பணிக்காக ஓட்டல்களை காலி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: சென்னை சென்ட்ரல் அருகே மெட்ரோ ரயில் பணிக்காக ஒரு மாதத்தில் காலி செய்ய இரண்டு ஓட்டல் நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஹவுரா, சென்ட்ரல் டவர் என்ற பெயரில் இரண்டு ஓட்டல்கள், அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, மெட்ரோ ரயில் பணிக்காக இந்த ஓட்டல்கள் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து தொடர்ந்து வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், நிலத்திற்கான இழப்பீடு மதிப்பீட்டை வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓட்டல்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இழப்பீட்டு மதிப்பை இரண்டு வாரத்தில் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், ஒரு மாதத்தில் காலி செய்ய ஓட்டல் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு