Published:Updated:

ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கட்டாயம் இல்லை: நோக்கியா விளக்கம்

ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கட்டாயம் இல்லை: நோக்கியா விளக்கம்
ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கட்டாயம் இல்லை: நோக்கியா விளக்கம்
ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கட்டாயம் இல்லை: நோக்கியா விளக்கம்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர்  நோக்கியா ஆலையில் உள்ள ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருப்ப ஓய்வுத் திட்டம் கட்டாயமானதல்ல என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை நோக்கியா ஆலை வரி தொடர்பான பிரச்னையில் சிக்கியுள்ளது. இதையடுத்து அந்த ஆலையை மைக்ரோசாஃப்டுக்கு விற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செல்போன் உற்பத்தி மெல்ல குறைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

விருப்ப ஓய்வுத் திட்டத்தை ஏற்குமாறு நோக்கியா நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக அந்நிறுவன ஊழியர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இவ்விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு நோக்கியா நிர்வாகத்துக்கு அறிவுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்வதென நோக்கியா இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் நோக்கியா நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருப்ப ஓய்வுத் திட்டம் கட்டாயமானதல்ல என்றும், அவர்கள் விரும்பினால் மட்டும் இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.