Published:Updated:

இந்திய நாட்டை பிளவுபடுத்த மதவாத சக்திகள் முயற்சிக்கின்றன: நாராயணசாமி!

விகடன் விமர்சனக்குழு
இந்திய நாட்டை பிளவுபடுத்த மதவாத சக்திகள் முயற்சிக்கின்றன: நாராயணசாமி!
இந்திய நாட்டை பிளவுபடுத்த மதவாத சக்திகள் முயற்சிக்கின்றன: நாராயணசாமி!
இந்திய நாட்டை பிளவுபடுத்த மதவாத சக்திகள் முயற்சிக்கின்றன: நாராயணசாமி!

காரைக்கால்: இந்திய நாட்டை பிளவுபடுத்த மதவாத சக்திகள் முயற்சிக்கின்றன என்று நாராயணசாமி கூறினார்.

மத்திய அமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் பிரசாரம் செய்தபோது, ''நமது இந்திய நாடு, உலகின் 2வது மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கி வருகிறது. இந்திய நாட்டை பிளவுபடுத்த மதவாத சக்திகள் முயற்சி செய்கின்றன.

அந்த சக்திகளுக்கு அதற்கான வாய்ப்பினை அளிக்காமல் நமது நாட்டை பிளவுபடுத்தவிடாமல் அனைத்து சமுதாய மக்களும் தடுத்து நிறுத்த வேண்டும்.

தி.மு.க தலைவர் கருணாநிதி, மோடியை தனது நண்பர் என்றும், நல்ல உழைப்பாளி என்றும் கூறுகிறார். அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதுவரை பா.ஜ.க.வை பற்றி விமர்சனம் செய்யவில்லை. இந்த 2 கட்சிகளும் வெற்றி பெற்றால், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்வார்கள்.

ரங்கசாமி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி மக்களுக்காக எந்தவொரு நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. காங்கிரஸ் அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் முடக்கினார். மக்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு என்ன ஆகும்? என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எனவே மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும். இளந்தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும்" என்று கூறினார்.