Published:Updated:

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு: சி.சி.டிவி. காட்சிகள் விடிய விடிய ஆய்வு!

Vikatan Correspondent

சென்னை: சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான சதிகாரர்களை கண்டுபிடிக்க அங்குள்ள சி.சி.டிவி.யில் பதிவாகி இருக்கும் காட்சிகளை போலீசார் விடிய விடிய ஆய்வு செய்தனர்.

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு தொடர்பாக 81 சி.சி.டிவிக்களில் பதிவான காட்சிகளை சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் விடிய விடிய ஆய்வு செய்தனர்.

மேலும், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. காவல் துறை ஐ.ஜி. மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, சென்ட்ரலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இரண்டு கடிகாரங்களின் பாகங்களை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

வெடிபொருட்களை குறித்த நேரத்தில் வெடிக்கச் செய்ய, அவை தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.