Published:Updated:

சென்னை குண்டுவெடிப்பு எதிரொலி: அணுஉலைகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Vikatan Correspondent
சென்னை குண்டுவெடிப்பு எதிரொலி: அணுஉலைகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை குண்டுவெடிப்பு எதிரொலி: அணுஉலைகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை குண்டுவெடிப்பு எதிரொலி: அணுஉலைகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னையில் நடைபெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணு உலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுபோல், தமிழகத்தின் பல்வேறு வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைகளுக்கு பின்னரே மலைக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவை மெட்டல் டிடக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகின்றன.

உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை மலை ரயிலில், வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் தீவிர ஆய்வு நடத்தினர். மேலும் மேட்டுப்பாளையம் மற்றும் உதகை பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.