Published:Updated:

சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு: பெங்களூரு விரைந்தது சி.பி.சி.ஐ.டி

Vikatan Correspondent
சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு: பெங்களூரு விரைந்தது சி.பி.சி.ஐ.டி
சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு: பெங்களூரு விரைந்தது சி.பி.சி.ஐ.டி
சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு: பெங்களூரு விரைந்தது சி.பி.சி.ஐ.டி

சென்னை: சென்னை சென்ட்ரலில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த தமிழக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் பெங்களூரு விரைந்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனி்டையே, சென்னை சென்ட்ரலில் நடந்த குண்டுவெடிப்புக்கு பெங்களூருவில் இருந்து சதித் திட்டம் தீட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி.க்கள் அன்பு, ஜெயகவுரி ஆகியோர் கொண்ட 10 பத்து பேர் குழு, இன்று காலை விமானம் மூலம் பெங்களூரு சென்றது. இந்த குழு பெங்களூரு காவல்துறையினரிடம் சதித்திட்டம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.