Published:Updated:

சென்னை குண்டுவெடிப்பு: தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் விசாரணை!

Vikatan Correspondent
சென்னை குண்டுவெடிப்பு: தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் விசாரணை!
சென்னை குண்டுவெடிப்பு: தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் விசாரணை!
சென்னை குண்டுவெடிப்பு: தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் விசாரணை!

சென்னை: சென்னை சென்ட்ரலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வுக்குழு ஐஜி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பெங்களூருவில் விசாரணை தொடங்கியுள்ளோம் என்றார்.

ஆந்திரா, கர்நாடக காவல்துறையினருடன் இணைந்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் பணியாற்றுகிறார்கள் என்றும், குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகம், ஆந்திராவில் முழு விசாரணை நடத்தப்படும் என்றும் அகர்வால் தெரிவித்தார்.