Published:Updated:

அக்னி நட்சத்திரம் நாளை மறுநாள் முதல் ஆரம்பம்!

Vikatan Correspondent
அக்னி நட்சத்திரம் நாளை மறுநாள் முதல் ஆரம்பம்!
அக்னி நட்சத்திரம் நாளை மறுநாள் முதல் ஆரம்பம்!
அக்னி நட்சத்திரம் நாளை மறுநாள் முதல் ஆரம்பம்!

சென்னை: சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில்,  அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே கடந்த சில வாரங்களாக வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நாளை மறுதினம் தொடங்குவதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உக்கிரம் மே 28ஆம் தேதி வரை நீடிக்கும்.

இந்த ஆண்டில் பல மாவட்டங்களில் கடந்த மாதம் தொடக்கத்திலேயே வெயில் 100 டிகிரியை எட்டியது. கடந்த மாதம் இறுதியில் வெயில் 107 டிகிரி பதிவானது.

எனவே, மே மாதத்தில் வெயில் 112 டிகிரி வரை உயர வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.