Published:Updated:

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்!

Vikatan Correspondent
அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்!
அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்!
அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்!

சென்னை: அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய பல ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன.

அரக்கோணம் அடுத்த சித்தேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனாதால், அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பணியாளர்கள் தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய ஆலப்புழா, காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்ட பல ரயில்கள் இன்று தாமதமாக வருகிறது.