Published:Updated:

பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு!

Vikatan Correspondent
பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு!
பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு!
பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு நாளை வெளியிடப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வை இந்தாண்டு 8.45 லட்சம் பேர் எழுதினர். விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி 15ஆம் தேதி வரை நடந்தது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2 தேர்வு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் தேர்வு முடிவு மற்றும் ரேங்க் பட்டியலை வெளியிடுகிறார்.

இந்தாண்டும்  தனியார் இணையதளங்களுக்கு தேர்வு முடிவு வெளியிட அனுமதியில்லை. தமிழக அரசு இணையதளத்தில் மட்டுமே தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

மேற்கண்ட முகவரியில் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை மாணவர்கள் செல்போனில் தெரிந்து கொள்ளவும் அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்கு செல்போன் தகவல் பக்கத்தில் TNBOARD என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, இடைவெளிவிட்டு பிறகு பதிவு எண்ணையும் அதைத் தொடர்ந்து பிறந்த தேதியையும் பதிவு செய்து 9282232585 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தேர்வு முடிவு அறியலாம்.