Published:Updated:

வரதட்சணை புகார்: ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சஸ்பெண்ட்!

Vikatan Correspondent
வரதட்சணை புகார்: ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சஸ்பெண்ட்!
வரதட்சணை புகார்: ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சஸ்பெண்ட்!
வரதட்சணை புகார்: ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சஸ்பெண்ட்!

சென்னை: வரதட்சணை புகாரில் சிக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பிரியதர்ஷினி என்ற 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலித்துவிட்டு, வரதட்சணை காரணமாக வருண்குமார் ஐ.பி.எஸ். ஏமாற்றி விட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில், அவர் சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து வருண்குமாரை அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், தனக்கு முதுகுவலி மற்றும் நெஞ்சுவலி எனக் கூறியதால், வருண்குமார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அதிகாரி வருண்குமாரை தமிழக உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதற்கான உத்தரவு ராயப்பேட்டையில் மருத்துவமனையில் உள்ள வருண் குமாரிடம் வழங்கப்பட்டது.