Published:Updated:

கணவன் விரட்டியபோது கள்ளக்காதலுடன் கிணற்றுக்குள் விழுந்த இளம்பெண்!

கணவன் விரட்டியபோது கள்ளக்காதலுடன் கிணற்றுக்குள் விழுந்த இளம்பெண்!
கணவன் விரட்டியபோது கள்ளக்காதலுடன் கிணற்றுக்குள் விழுந்த இளம்பெண்!
கணவன் விரட்டியபோது கள்ளக்காதலுடன் கிணற்றுக்குள் விழுந்த இளம்பெண்!

கிருஷ்ணகிரி: கணவனுக்கு பயந்து ஓடிய இளம்பெண் கள்ளக்காதலுடன் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், காளிகோயில் அருகே உள்ள சின்னகிணறு, பசவணகோயில் பகுதியை சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி துர்வாசன் (39). இவரது மனைவி மலர்க்கொடி (30). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், மலர்க்கொடிக்கும், பால் கம்பெனி வேன் டிரைவர் வேலன் (35) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த துர்வாசன், மனைவியை தட்டிக் கேட்டுள்ளார். ஆனால் மலர்க்கொடி, அதை மறுத்துள்ளார். இதையடுத்து துர்வாசன் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார். ஆனால், தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுவதாக மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பஞ்சாயத்தார், உன் மனைவி மீது உனக்கு சந்தேகம் இருந்தால் கையும் களவுமாக பிடித்து வா எனக் கூறியுள்ளனர். இதையடுத்து துர்வாசன், கள்ளக்காதலனுடன் மனைவியை பிடிக்க திட்டமிட்டார். அதன்படி நேற்றிரவு தனது மனைவியிடம் தான் சின்னக்கிணறுக்கு செல்வதாக கூறிவிட்டு, அங்கு செல்லாமல் தனது வீட்டின் அருகே பதுங்கி இருந்திருக்கிறார்.

நள்ளிரவு சுமார் 1 மணியளவில், ஊருக்கு வெளியே பால் வண்டியை நிறுத்தி விட்டு டிரைவர் வேலன், துர்வாசன் வீட்டிற்கு நடந்து வந்திருக்கிறார். இதை கவனித்த தூர்வாசன், வேலனை பின் தொடர்ந்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த வேலனும், மலர்க்கொடியும் உல்லாசமாக இருந்திருக்கின்றனர். இதை பார்த்ததும் துர்வாசன் சத்தமிட்டபடி வீட்டை நோக்கி ஓடியிருக்கிறார்.

கணவர் ஆவேசமாக ஓடி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த மலர்க்கொடியும், வேலனும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இருவரையும் தூர்வாசன் விரட்டியிருக்கிறார். துர்வாசனிடம் சிக்காமல் இருக்க தலைதெறிக்க ஓடிய கள்ளக்காதல் ஜோடி, அங்கிருந்த 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால், உள்ளே விழுந்த இருவரின் கால்களும் முறிந்தது. இதனால் வலியால் அலறினர். சத்தம் கேட்டு ஊர்க்காரர்கள் அங்கு திரண்டனர்.

இதுபற்றி தகவலறிந்த கந்திக்குப்பம் காவல்துறையினர் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருவரையும் கயிறு கட்டி மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.