Published:Updated:

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் விகடன் இணைய தளத்தில்!

Vikatan Correspondent
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் விகடன் இணைய தளத்தில்!
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் விகடன் இணைய தளத்தில்!
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் விகடன் இணைய தளத்தில்!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் விகடன் இணைய தளத்தில் காணலாம்.

நாடாளுமன்றத்திற்க்கான தேர்தல் நாடுமுழுவதும் ஒன்பது கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவுற்றது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.

முதலில் தபால் ஓட்டுகளும் அதைத் தொடர்ந்து வாக்கு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்பட உள்ளன. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை 9 மணியில் வெளியாகும் என்றும் மாலை 6 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் முடிய முடிய உடனுக்குடன் விகடன் இணையதளத்தில் வெளியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை காண இங்கே க்ளிக் செய்யவும்