Published:Updated:

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

Vikatan Correspondent
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் எண்ணப்படும் தபால் வாக்குகளின் முடிவுகள் காலை 9 மணியளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் 16வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாடுமுழுவதும் ஒன்பது கட்டங்களாக கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 12 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

முதலில் தபால் ஓட்டுக்களை எண்ணும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து வாக்கு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்பட உள்ளன. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் தெரியவரும் என்றும் மாலை 6 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவது வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் வட்டத்தில் மத்திய போலீஸ் படையும், அடுத்த வட்டத்தில் மாநில சிறப்பு போலீசாரும், மூன்றாவது வட்டத்தில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 377 முதல் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் 13 ஆயிரத்து 626 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்களும் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.