Published:Updated:

குஜராத் புதிய முதல்வராகிறார் ஆனந்தி பென்!

Vikatan Correspondent
குஜராத் புதிய முதல்வராகிறார் ஆனந்தி பென்!
குஜராத் புதிய முதல்வராகிறார் ஆனந்தி பென்!
குஜராத் புதிய முதல்வராகிறார் ஆனந்தி பென்!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆனந்தி பென் படேல் தேர்வு செய்யப்பட இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், நரேந்திர மோடி பிரதமராவார் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.

இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைப்பதும் குறித்தும், குஜராத்தின் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்தும் கடந்த சில தினங்களாக பா.ஜ.க. தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். இதில் குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக வருவாய்த்துறை அமைச்சர் ஆனந்தி பென் படேல், நிதியமைச்சர் நிதின் படேல், எரிசக்தி துறை அமைச்சர் சவுரவ் படேல், பா.ஜ.க. மாநில செயலாளர் பிகு தல்சானியா ஆகியோரின் பெயர் பரிசீலனை எடுத்துக்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (16ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே, வெளியிடப்பட்ட கருத்து கணிப்புப்படி பா.ஜ.க. வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து, நரேந்திர மோடி பிரதமராவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, நரேந்திர மோடி முதல்வராக உள்ள குஜராத் மாநிலத்திற்கு புதிய முதல்வராக அம்மாநிலத்தில் வருவாய்த்துறை அமைச்சராக உள்ள ஆனந்தி பென் படேல் தேர்வு செய்யப்படுவார் என பா.ஜனதா வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.