Published:Updated:

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை!

Vikatan Correspondent
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை!
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை!
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை!

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பஞ்சாபில் மொத்தம் 13 தொகுதிகள் உள்ளன. இதில், முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி பரீத்கோட், பதேகார் சாதிப், பாட்டியாலா மற்றும் சாங்கரூர் ஆகிய 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சி பெரோஸ்ரா, அனந்தபூர் சாகிப், கதார் சாதிப், பதிண்டா ஆகிய 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதா குர்தாஸ்பூர், ஹோசியர் பூர் ஆகிய 2 தொகுதிகளில் முன்னிலை வக்கிறது. அமிர்தசரஸ், ஜலந்தர் மற்றும் லூதியானா ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பதிண்டா தொகுதியில் கிரோன்மணி அகாலிதள வேட்பாளர் ஹர்சிமர்த் கவுர் பாதல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மன்பிரித் சிங் பாதலைவிட 42 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

பட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் தரம் வீரா காந்திரி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் பிரனீத் கவிரை விட 554 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். அமிர்தசரஸ் தொகுதியில் பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி 1,846 ஓட்டுகள் குறைவாக பெற்ற பின் தங்கியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் அம்கீந்தர் சிங் முன்னணியில் உள்ளார்.

குர்தாஸ்பூரில் பா.ஜனதா வேட்பாளர் நடிகர் வினோத் கன்னா முன்னணியில் உள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப்சிங் பஜ்வாவை விட 7,327 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார்.