Published:Updated:

மத்திய அமைச்சர்கள் ஷிண்டே, சல்மான் குர்ஷித் பின்னடைவு!

Vikatan Correspondent

புதுடெல்லி: பா.ஜ.க வேட்பாளர்கள் மேனகா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்களும், மத்திய அமைச்சர்களுமான சுஷி்ல்குமார் ஷிண்டே, சல்மான் குர்ஷித் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

பிலிபட் தொகுதி பாஜக வேட்பாளர் மேனகா காந்தியும், விதிஷா தொகுதி பாஜக வேட்பாளர் சுஷ்மா ஸ்வராஜும் முன்னிலையில் உள்ளனர்.

சிந்த்வாரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கமல்நாத் முன்னிலையில் உள்ளார்.

குர்தாஸ்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகர் வினோத் கன்னா முன்னிலையில் இருக்கிறார்.

பருக்காபாத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் மற்றும் புதுடெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான அஜய் மக்கான் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

சோலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய உள்துறை அமைச்சருமான சுஷி்ல்குமார் ஷிண்டே மற்றும் அஜ்மீர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சச்சின் பைலட் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.