Published:Updated:

சீமாந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடிக்கிறார்!

Vikatan Correspondent
சீமாந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடிக்கிறார்!
சீமாந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடிக்கிறார்!
சீமாந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடிக்கிறார்!

ஐதராபாத்: சீமாந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடிக்க உள்ளார்.

சீமாந்திராவில் 25 நாடாளுமன்ற தொகுதியும், 175 சட்டசபை தொகுதியும் உள்ளது. இங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.

ஓட்டு எண்ணிக்கையின் போது தொடக்கத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்–தெலுங்குதேசம் இடையே இழுபறி நிலையே நீடித்தது. பின்னர் தெலுங்குதேசம் கட்சி 97 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. ஜெகன் மோகன் ரெட்டி கட்சி 70 இடங்களில் மட்டுமே முன்னணி பெற்று இருந்தது. குப்பம் நாடாளுமன்ற தொகுதியில் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

சீமாந்திராவில் 90 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்க முடியும். தெலுங்கு தேசம் 97 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி விட்டது. இதன்மூலம், 9 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வர் ஆகிறார். ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

மேலும், புலிவேந்தலா சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட ஜெகன்மோகன் ரெட்டி அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெரும் நிலையில் உள்ளார். விசாகப்பட்டினம் எம்.பி. தொகுதியில் போட்டியிட்ட அவரது தாயார் விஜயம்மா, 30 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.