Published:Updated:

டெபாசிட் இழக்கிறார் கார்த்தி சிதம்பரம்!

Vikatan Correspondent
டெபாசிட் இழக்கிறார் கார்த்தி சிதம்பரம்!
டெபாசிட் இழக்கிறார் கார்த்தி சிதம்பரம்!
டெபாசிட் இழக்கிறார் கார்த்தி சிதம்பரம்!

சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 12 ஆயிரம் வாக்குகள் பெற்று 4 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கையில் இந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கார்த்தி சிதம்பரம் 11,958 வாக்குகள் பெற்று 4 இடத்தில் உள்ளார்.

47,440 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. முதல் இடத்திலும், தி.மு.க. 23,902 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும், பா.ஜ.க. 13,603 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன.

மொத்தம் பதிவான வாக்குகளில் 6 ல் ஒரு பங்கை வாங்கினால்தான் டெபாசிட் கிடைக்கும். ஆனால் தற்போதைய நிலையே அனைத்து சுற்றுகளிலும் நீடித்தால் கார்த்திக் சிதம்பரம் தனது டெபாசிட்டையே இழக்க நேரிடும்.