Published:Updated:

பிரதமர் மன்மோகன் சிங் நாளை ராஜினாமா!

Vikatan Correspondent
பிரதமர் மன்மோகன் சிங் நாளை ராஜினாமா!
பிரதமர் மன்மோகன் சிங் நாளை ராஜினாமா!
பிரதமர் மன்மோகன் சிங் நாளை ராஜினாமா!

புதுடெல்லி: 16வது நாடாளுமன்றத்துக்கான புதிய அரசு அமையவிருப்பதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் தனது பிரதமர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார்.

16வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 12ஆம் தேதி வரை நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து 16வது நாடாளுமன்றத்துக்கான பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க இருக்கிறார்.

இதற்கிடையே, இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் நான் பிரதமராக பதவியேற்க மாட்டேன் என மன்மோகன் சிங் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதவி பிரிவுபச்சார விருந்து அளிக்கப்பட்டது. மேலும், சோனியா காந்தியும் அவரது வீட்டில் வைத்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விருந்தளித்தார். மேலும் மத்திய அமைச்சர்கள் கையெழுத்திட்ட நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் புதிய மத்திய அரசு அமையவிருப்பதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை நாளை ராஜினாமா செய்கிறார். இதற்கான கடிதத்தை நாளை காலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து வழங்குகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.