Published:Updated:

நீலகிரியில் ஆ.ராசா தோல்வி; 'நோட்டா' வுக்கு 3வது இடம்!

Vikatan Correspondent
நீலகிரியில் ஆ.ராசா தோல்வி; 'நோட்டா' வுக்கு 3வது இடம்!
நீலகிரியில் ஆ.ராசா தோல்வி; 'நோட்டா' வுக்கு 3வது இடம்!
நீலகிரியில் ஆ.ராசா தோல்வி; 'நோட்டா' வுக்கு 3வது இடம்!
நீலகிரியில் ஆ.ராசா தோல்வி; 'நோட்டா' வுக்கு 3வது இடம்!

கோவை: நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா, 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணனிடம் தோல்வியை தழுவியுள்ளார்.

நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க, தி.மு.க வேட்பாளர்கள் இடையேதான் போட்டி நிலவியது. தொடக்கம் முதலே அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் இருந்து வந்தார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் மொத்தம் 4,63,700 வாக்குகள் பெற்று 1,04,940 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா 3,58,760 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.


காங்கிரஸ், ஆம் ஆத்மியை பின்னுக்கு தள்ளிய நோட்டா!

இந்த தொகுதியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி விட்டு 'நோட்டா'  3வது இடத்தை பிடித்துள்ளது. நோட்டாவுக்கு 46,559 வாக்குகள் கிடைத்துள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் காந்தி 38,702 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் ராணி 12,525 வாக்குகள் பெற்றுள்ளனர்.

நீலகிரி பா.ஜ.க வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால்ல் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் நோட்டாவுக்கு வாக்களித்ததாக தெரிகிறது. இதன்காரணமாகவே நீலகிரி தொகுதியில் அதிக அளவு 'நோட்டா' வாக்குகள் பதிவானதாக தெரிகிறது.