Published:Updated:

திருமாவளவன், டி.ஆர்.பாலு தோல்வி!

Vikatan Correspondent
திருமாவளவன், டி.ஆர்.பாலு தோல்வி!
திருமாவளவன், டி.ஆர்.பாலு தோல்வி!
திருமாவளவன், டி.ஆர்.பாலு தோல்வி!

சென்னை: தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் திருமாவளவன் ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர்.

சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், 1,28,507 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:

அ.தி.மு.க. (சந்திரகாசி) - 4,28,858

விடுதலை சிறுத்தைகள் (திருமாவளவன்) - 3,00,351

பா.ம.க. (சுதா மணிரத்தினம்) - 2,28,327

காங்கிரஸ் (வள்ளல் பெருமாள்) - 28,981

டி.ஆர்.பாலு தோல்வி

இதேபோல், தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவும் 1,44,119 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார்.

வாக்குகள் விபரம்:

அ.தி.மு.க. - 5,10,307

தி.மு.க. - 3,66,188

பா.ஜ.க. - 58,521

மார்க்சிஸ்ட் கம்யூ.- 23,215

ஜெகத்ரட்சகனும் தோல்வி

மேலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனும் தோல்வி அடைந்துள்ளார்.

எல்.கே.சுதீஷ், மணிசங்கர் அய்யர் தோல்விமுகம்

சேலம் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யர் ஆகியோரும் தோல்வியை சந்தித்துள்ளனர்.