இன்றைய நிலையில் நம் ஒவ்வொருவருக்கும் காப்பீடு என்பது முக்கியம். அதிலும் குடும்பத்தின் வருமானம் ஈட்டும்நபர் என்றால், அதிஅவசியமானது. ஆனால், நூற்றுக்கணக்கில் குவிந்துகிடக்கும் காப்பீட்டுத் திட்டங்களில் எது அவசியம்?

எளிமையாக விளக்குகிறார் நிதி ஆலோசகர் ஆர்.ராமலிங்கம். ''பொதுவாக ஒருவர்ஆயுள், விபத்து, ஆரோக்கியக் காப்பீடு என மூன்று விதமான காப்பீடுகள் எடுப்பது சிறந்தது. வாகனம் வைத்திருப்பவர்கள் கூடுதலாக மோட்டார் பாலிசியும் எடுத்துக்கொள்வது நலம்!''

ஆயுள் காப்பீடு!

ஒருவரின் ஆண்டு சம்பளத்தைப்போல் 10 மடங்குத் தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒருவரின் மாதச் சம்பளம் 20 ஆயிரம் என்றால், அவரின் ஆண்டு சம்பளம் 2 லட்சத்து 40 ஆயிரம். அவர் 24 லட்சம் தொகைக்கு பாலிசி எடுப்பதுதான் சரியாக இருக்கும்!

குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும் டேர்ம் பிளான்கள் சிறந்தது!

விபத்துக் காப்பீடு!

பர்சனல் ஆக்சிடென்ட் பாலிசி என்கிற தனி நபர் பாலிசியை அனைவரும் எடுப்பது அவசியம். இது விபத்து எதிலாவது சிக்கி உயிர் இழந்தால், இழப்பீடு வழங்குவதாக இருக்கும். இந்த பாலிசியில் 1 லட்சம் கவரேஜுக்கு 100-தான் பிரீமியம்!

மெடிக்ளைம்!

விபத்து அல்லது உடல் நலப் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்ந்து எடுக்கும் சிகிச்சைக்கான செலவைத் திரும்பப் பெறச் செய்யும் பாலிசி. மெடிக்ளைம் பாலிசியில் கவரேஜ் இரு பிரிவுகளாக இருக்கின்றன. முதல் பிரிவு, மருத்துவக் காப்பீடு. இதில், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தங்கி எடுத்துக்கொள்ளும் சிகிச்சை மற்றும் அதனை ஒட்டிய செலவுகள் அடங்கும். இரண்டாவது பிரிவு, கிரிட்டிக்கல் இல்னெஸ் என்கிற தீவிர நோய் பாதிப்புக்கான (புற்றுநோய், சிறுநீரகச் செயல் இழப்பு, உறுப்பு மாற்று சிகிச்சை) செலவுகள் அடங்கும். இந்த இரண்டுக்கும் தனித் தனியாக பிரீமியம் கட்ட வேண்டி வரும்!

பாலிசி எப்படி எடுப்பது?

உங்கள் சுற்றுப்புறத்திலேயே நிச்சயம் ஏராளமான இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்கள் இருப்பார்கள். அவர்களைத் தொடர்புகொள்ளலாம். அல்லது அருகில் உள்ள காப்பீடு நிறுவனங்களின் கிளையை அணுகினால் போதும்!

தேவையான ஆவணங்கள்!

லைஃப் இன்ஷூரன்ஸ், விபத்து, மெடிக்ளைம் பாலிசி எடுக்க - வயதுக்கான ஆதாரம் (பள்ளி, கல்லூரிச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவை), அதிக தொகைக்கு பாலிசி எடுக்கும்போது, புகைப்படம் மற்றும் வருமானத்துக்கான ஆதாரம் தேவைப்படும்.

மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்க ஆர்.சி புத்தகத்தின் நகல், அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரம்!