Published:Updated:

ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண் பயணி பலி: டிக்கெட் பரிசோதகர் கைது!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில், ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டதால் பெண் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜல்கான் என்ற பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில், 38 வயதான உஜ்வாலா பாண்டே என்ற பெண் பயணி, தனது 10 வயது மகளுடன் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார்.

சாதாரண வகுப்பு பயணச் சீட்டு வைத்திருந்த அவர், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் ஏறியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த சம்பத் சாலன்கே என்ற டிக்கெட் பரிசோதகர், பெண் பயணியை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்த உஜ்வாலா பாண்டே, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, ரயிலின் சமையலறை பெட்டியில் பதுங்கிக் கொண்ட டிக்கெட் பரிசோதகர் சம்பத்தை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.

டிக்கெட் பரிசோதகர் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய ரயில் பயணிகள், அவரை சரமாரியாக தாக்கினர்.