Published:Updated:

வதோதரா தொகுதியில் போட்டியிட அமித் ஷாவுக்கு வாய்ப்பு?

விகடன் விமர்சனக்குழு
வதோதரா தொகுதியில் போட்டியிட அமித் ஷாவுக்கு வாய்ப்பு?
வதோதரா தொகுதியில் போட்டியிட அமித் ஷாவுக்கு வாய்ப்பு?
வதோதரா தொகுதியில் போட்டியிட அமித் ஷாவுக்கு வாய்ப்பு?

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததையொட்டி அந்த தொகுதியில், அமித் ஷா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அமித் ஷா நியமிக்கப்பட்டிருந்தார்.

அமித் ஷாவின் கடும் உழைப்பு காரணமாக அந்த மாநிலத்தில் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.
இதையடுத்து, அவரை கவுரப்படுத்தும் விதமாக அமித் ஷாவை வதோதரா தொகுதியில் வேட்பாளராக நிறுத்த நரேந்திர மோடி விரும்புவதாக கூறப்படுகிறது.

அமித் ஷா வெற்றி பெற்ற பின்னர் அவருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி வழங்கவும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரம், வதோதரா தொகுதியில் அமித் ஷாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.