Published:Updated:

45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர் மீனவர்கள்!

45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர் மீனவர்கள்!
45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர் மீனவர்கள்!
45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர் மீனவர்கள்!

சென்னை: மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த 45 நாள் தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், கடல் சூழியல் மேம்படும் நோக்கிலும், ஒவ்வொரு வருடமும் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்படுவதுண்டு.

அதன்படி, மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். குறிப்பாக சென்னை ராயபுரம், காசிமேடு, பட்டினப்பாக்கம் மீனவர்கள் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பெரிய விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் 15 நாட்கள் கடலில் இருந்து மீன்பிடித்து கரை திரும்புவார்கள்.

சிறிய ரக விசைப்படகுகளில் கடலுக்கு செல்பவர்கள் 2 அல்லது 3 நாட்களில் கரை திரும்புவார்கள்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்துள்ளதால், சந்தையில் மீன் விலை குறையும் என மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.