Published:Updated:

மக்களவை சபாநாயகர் ஆகிறார் சுமித்ரா மகாஜன்!

Vikatan Correspondent
மக்களவை சபாநாயகர் ஆகிறார் சுமித்ரா மகாஜன்!
மக்களவை சபாநாயகர் ஆகிறார் சுமித்ரா மகாஜன்!
மக்களவை சபாநாயகர் ஆகிறார் சுமித்ரா மகாஜன்!

புதுடெல்லி: மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் நியமிக்கப்படலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

16வது மக்களவை மக்களவை கூட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில்,  தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து மக்களவை கூட்டம் தொடங்கியது.  புதிய எம்.பி.க்களின் பதவிப்பிரமாணம் நாளையும், நாளை மறுதினமும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் 16 வது மக்களவையின் அதிகாரப்பூர்வ சபாநாயகராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பா.ஜனதா தலைவர்கள் கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்தி வந்தனர்.

இதில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி. சுமித்ரா மகாஜனையே சபாநாயகர் பதவியில் அமர்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு சுமித்ரா மகாஜன் சபாநாயகர் பதவியில் அமர்த்தப்பட்டால், மக்களவை சபாநாயகராக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் சபாநாயகராக இருப்பார். காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 15 வது மக்களவையின் சபாநாயகராக மீராகுமார் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.